பழமொழிகள் பழங்காலம் தொட்டு வழக்கத்திலிருக்கும் பொன்மொழிகளாகும். தொன்று தொட்டு
நம் முன்னோர்கள் தங்கள் அநுபவத்தால் உணர்ந்த உண்மைகளை,
இந்தப் பழமொழிகளின் வாயிலாக, உலகத்தோர் உணரும் பொருட்டு
சுருங்கக் கூறி விளங்க வைத்திருக்கிறார்கள். உங்களுக்காக சில சிறந்த பழமொழிகள்
இங்கே:
-
அன்பிருந்தால் ஆகாததும் இல்லை.
-
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.
-
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
-
அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்
-
அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள்
-
அடியாத மாடு படியாது
-
அழுத பிள்ளை தான் பால் குடிக்கும்
-
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு
-
ஆக்கப் பொறுத்தவர் ஆறப் பொறுப்பதில்லை
-
ஆடையில்லாதவன் அரை மனிதன்
-
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.
-
ஆழம் அறியாமல் காலை இடாதே.
-
ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை
-
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
-
ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு
-
ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால்
-
இக்கரைக்கு அக்கரை பச்சை
-
இரும்படிக்கும் இடத்தில் ஈக்கென்ன வேலை
-
இரைக்கிற ஊற்றே சுரக்கும்
-
இளங்கன்று பயமறியாது
-
இளமையில் கல்.
-
இளமையில் கல்வி சிலையில் எழுத்து.
-
உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா.
-
உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நினைக்காதே
-
உண்டிக்கு அழகு விருந்தோடு உண்டல்.
-
உதட்டில் உறவு உள்ளத்தில் பகை
-
உப்பிட்டவரை உள்ளளவும் நினை
-
உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?
ஊருடன் ஒட்டி வாழ்
-
உயிர் காப்பான் தோழன்
-
ஊருடன் பகைக்கின் வேறுடன் கெடும்
-
ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்
-
எட்டாக் கனிக்குக் கொட்டாவி விடாதே
-
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்.
-
எரிகிற வீட்டில் பிடுங்கியது இலாபம்
-
எரிகிற விளக்கானாலும் தூண்டுகோல்
வேண்டும்.
-
எரியும் கொள்ளிகளில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி?
-
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்.
-
எறும்பு ஊரக் கல்லும் தேயும்.
-
ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது
-
ஐந்திலே வளையாதது, ஐம்பதிலே வளையுமா?
-
ஓரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம்
-
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்
-
ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்
-
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
-
ஓடும் நாயைக் கண்டால் துரத்தும் நாய்க்கு இளக்காரம்
-
கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா?
-
கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம்
-
கல்விக்கு அழகு கசடர மொழிதல்.
-
கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்
-
கழுதைக்குத் தெரியுமா கற்பூற வாசனை?
-
கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே
இனிப்பு.
-
கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு
-
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.
-
கிட்டாதாயின் வெட்டென மற
-
குட்டுப் பட்டாலும் மோதிரக்கையால் குட்டுப் பட வேண்டும்
-
குரைக்கிற நாய் கடிக்காது
-
குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை.
-
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்
-
குனியக் குனியக் குட்டுவான், குனிந்தவன் நிமிர்ந்தால்
குட்டினவன் ஓடுவான்
-
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
-
கூழானாலும் குளித்துக் குடி; கந்தையானாலும் கசக்கிக் கட்டு
-
கெடுவான் கேடு நினைப்பான்.
-
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை
-
கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி.
-
கொட்டினாள் தேள் கொட்டாவிட்டால் பிள்ளைப் பூச்சி
-
கோழி மிதித்துக் குஞ்சு முடம் ஆகிவிடாது
-
சட்டியில் இருந்தால் தான் அகப்பையில்
வரும்.
-
சர்க்கரை என்று சொன்னால் தித்திக்குமா?
-
சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரமும் முழங்கால் மட்டு
-
சித்திரமும் கைப்பழக்கம்
-
சிறு துரும்பும் பல் குத்த உதவும்
-
சின்ன மீனைப் போட்டுப் பெரிய மீனைப் பிடி
-
சுடினும் செம்பொன் தன்னொலி கெடாது.
-
செய்வன திருந்தச் செய். சோம்பித்
திரியேல்.
-
தந்தை தாய் பேண்.
-
தருமம் தலை காக்கும்
-
தனக்கு மிஞ்சித் தான் தருமம்
-
தனி மரம் தோப்பாகாது
-
தன் கையே தனக்குதவி
-
தன் வினை தன்னைச் சுடும் ஓட்டப்பம் வீட்டைச் சுடும்
-
தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்க்காதே
-
தாயிற் சிறந்ததொரு கோவிலுமில்லை; தந்தை சொல் மிக்க
மந்திரமில்லை
-
தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு
-
தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும்
-
தானாடா விட்டாலும் சதையாடும்
-
தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினை
அறுப்பான்
-
துள்ளுகிற மாடு பொதி சுமக்காது
-
தூரத்துப் பச்சை கண்ணுக்குக் குளிர்ச்சி.
-
தேடாது அழிக்கின் பாடாய் முடியும்.
-
தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்
-
நண்டு கொழுத்தால் வளையில் தங்காது
-
நல்ல மாட்டிற்கு ஒரு சூடு நல்ல மனிதனுக்கு ஒரு வார்த்தை
-
நல்லவன் என்ற பெயரெடுக்க நாள் செல்லும்.
-
நன்மை கடைப்பிடி. நிழலின் அருமை வெயிலில்
தெரியும்.
-
நாய் வாலை நிமிர்த்த முடியாது
-
நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள்
-
நிறை குடம் நீர் தளும்பாது. குறைகுடம்
கூத்தாடும்.
-
நுணலும் தன் வாயால் கெடும்
-
நுண்ணிய கருமமும் எண்ணித் துணிக.
-
நெருப்பில்லாமல் புகையாது
-
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
-
நோய்க்கு இடம் கொடேல்.
-
பசி வந்திடப் பத்தும் பறந்து போம்
-
பணம் பத்தும் செய்யும்
-
பதறாத காரியம் சிதறாது.
-
பந்திக்கு முந்து படைக்குப் பிந்து
-
பருவத்தே பயிர் செய்
-
பல துளி பெருவெள்ளம்.
-
பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்ட மாட்டான்
-
பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எல்லப்படும்.
-
பழகப் பழகப் பாலும் புளிக்கும்
-
பாம்பின் கால் பாம்பு அறியும்.
-
பாம்புக்குப் பால் வார்த்தாலும் நஞ்சைத்தான் கக்கும்
-
பார்த்தால் பூனை பாய்ந்தால் புலி
-
பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்.
-
பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டாதே
-
புத்திமான் பலசாலி ஆவான்.
-
புயலுக்குப் பின்னே அமைதி
-
பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்.
-
பெண் என்றால் பேயும் இரங்கும்
-
பெற்ற மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு.
-
பேராசை பெரு நட்டம்.
-
பொறுத்தார் பூமி ஆள்வார்.
-
போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து
-
மடியில் கனமிருந்தால் வழியில் பயம்
-
மத்தளத்திற்கு இரு புறமும் இடி
-
மனம் உண்டானால் வழி உண்டு.
-
மந்திரிக்கு அழகு வரும்பொருள் உரைத்தல்.
-
மின்னுவது எல்லாம் பொன்னல்ல.
-
முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப் படலாமா?
-
முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்
-
மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடாதே
-
யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்
-
யானைக்கும் அடி சறுக்கும்
-
யானைகொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும்
-
யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே
-
வரவு எட்டணா செலவு பத்தணா
-
வருமுன் காப்பதறிவு
-
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்
-
வாழு, வாழ விடு
-
விதை ஒன்று போட்டால் சுரை ஒன்று முளைக்குமா?
-
விளையும் பயிர் முளையிலே தெரியும்.
-
வீட்டில் எலி வெளியில் புலிவெட்டு ஒன்று துண்டிரண்டு
-
வெறுங்கை முழம் போடுமா?
-
வெளுத்ததெல்லாம் பாலல்ல
-
வெள்ளம் வரும் முன் அணைகோல வேண்டும்.
-
வேலியே பயிரை மேய்ந்தால் விளைவு என்ன?